Home வாழ் நலம் காலையில் பழங்கள் சாப்பிட்டால் சுறுசுறுப்புடன் செயல்படலாம்!

காலையில் பழங்கள் சாப்பிட்டால் சுறுசுறுப்புடன் செயல்படலாம்!

805
0
SHARE
Ad

Fruits2பிப்ரவரி 17 – காலை உணவை எடுத்துக்கொண்டால் தான் நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். ஆரோக்கியமான காலை உணவை எடுத்துக்கொள்வதுடன், கூடவே பழங்களையும் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது.

குடலியக்க பிரச்சனையோ அல்லது மலச்சிக்கல் பிரச்சனையோ இருப்பவர்கள், காலையில் வாழைப்பழத்தை சாப்பிட்டால், வயிற்றில் உள்ள நச்சுக்களானது சீரான முறையில் தள்ளப்பட்டு,

bananaசெரிமான மண்டலமானது முறையாக இயங்கி, மலச்சிக்கல் பிரச்சனையானது நீங்கும். மேலும் வாழைப்பழத்தை சாப்பிட்டால், உடலின் ஊட்டச்சத்து நாள் முழுவதும் இருக்கும்.

#TamilSchoolmychoice

தர்பூசணியை அதிகம் எடுத்துக் கொள்வதும் மிகவும் சிறந்தது. ஏனெனில் இவற்றில் நீர்ச்சத்து அதிம் இருப்பதால், இதனை காலை வேளையில் உட்கொண்டால், அது உடலின் ஆற்றலை நாள் முழுவதும் தக்க வைக்கும்.

watermelonஉலர் பழங்களான முந்திரி, பாதாம் மற்றும் உலர் திராட்சை போன்றவைகளில் ஊட்டச்சத்து அதிகம் இருப்பதால், இதனை காலையில் எடுத்துக் கொண்டால், நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்கும்.

பப்பாளிபழம் உடல் எடையை அதிகரிக்க நினைப்போருக்கு மிகவும் சிறப்பான உணவுப் பொருள். உடலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றும் பழங்களில் முக்கியமான ஒன்று.

papayaஅதுமட்டுமின்றி, சருமம் பொலிவோடு இருக்க வேண்டுமானால், காலையில் பப்பாளியை சாப்பிடுவது நல்லது. ஆனால் இதை உடல் வெப்பம் அதிகம் இருப்போர் உட்கொள்ளக்கூடாது. மேலும் கர்ப்பிணிகள் இந்த பழத்தை சாப்பிடக்கூடாது.