Home இந்தியா விஜயகாந்த், பிரேமலதாவுக்கு ரூ. 24,000 அபராதம் – உயர்நீதிமன்றம் அதிரடி!

விஜயகாந்த், பிரேமலதாவுக்கு ரூ. 24,000 அபராதம் – உயர்நீதிமன்றம் அதிரடி!

492
0
SHARE
Ad

VIJAYAKANT_1779419fசென்னை, பிப்ரவரி 17 – நீதிமன்றத்தின் நேரத்தை தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோர் வீணடித்து விட்டதாக கோபமடைந்த சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு குழு இன்று விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா உள்ளிட்ட 4 பேருக்கு தலா ரூ. 24,000 அபராதம் விதித்து அதிரடி உத்தரவிட்டது.

தேமுதிக பொதுக்கூட்டங்களிலும், அதேபோல அறிக்கை மூலமும் தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர், தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர்.

இதேபோல, தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.பார்த்தசாரதி உள்ளிட்டவர்களும் விமர்சனங்கள் செய்து வந்தனர். இதையடுத்து ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, விஜயகாந்த், பிரேமலதா மற்றும் மேலும் இருவர் மீது அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன.

#TamilSchoolmychoice

இந்த அவதூறு வழக்குகள் தமிழகத்தின் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இதையடுத்து இந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்யவேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில், விஜயகாந்த், பிரேமலதா உள்ளிட்ட 4 பேர் சார்பில் மொத்தம் 12 வழக்குகள் தொடரப்பட்டது.

இந்த நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் நீதிபதி சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய குழு முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்குகளை இன்னும் உச்சநீதிமன்றத்துக்கு மாற்றவில்லையா என்று நீதிபதிகள் விணவினர். அதற்கு விஜயகாந்த்தின் வழக்கறிஞர் எழுந்து, இந்த வழக்குகளில் சில தமிழ் ஆவணங்கள் உள்ளது.

இவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டியதுள்ளது. எனவே, இந்த வழக்குகளை மாற்ற ஒரு வாரம் கால அவகாசம்வேண்டும் என்று கூறினார். இதைக் கேட்டுக் கோபமடைந்த நீதிபதிகள், ஏற்கனவே, அனுமதி வழங்கி பல நாட்களாகிவிட்டது.

ஆனால், இதுவரை வழக்குகளை உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன்மூலம் இந்த உயர்நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கிறீர்கள். எனவே, இந்த 12 வழக்குகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கின்றோம்.

இந்த அபராதத் தொகையை மனுதாரர்கள் விஜயகாந்த், பிரேமலதா உள்ளிட்டோர் வழங்க வேண்டும். 15 நாட்களுக்குள் இந்த வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால், 12 மனுக்களையும் தள்ளுபடி செய்து விடுவோம் என்று அதிரடியாக உத்தரவிட்டனர்.