Home வாழ் நலம் வெந்நீர் குடித்தால் இளமையாக இருக்கலாம்!

வெந்நீர் குடித்தால் இளமையாக இருக்கலாம்!

765
0
SHARE
Ad

grohe-red-design-instant-hot-waterபிப்ரவரி 18 – தினமும் காலையில் வெந்நீரை குடிப்பதால் உடல்நலத்திற்கு ஆரோக்கியம் கிடைப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மிதமான நீரை விட வெந்நீரை தினமும் பருகும் போது அது உடல் ஆரோக்கியத்திற்கு அதிகம் உதவுகிறது.

உடலை சுத்தம் செய்யும் இந்த வெந்நீர், வேகமாக வயதாவதையும் குறைத்து இளமையை தக்க வைத்து கொள்ள உதவும். கடும் குளிர்காலத்தில் ஏற்படும் மூக்கடைப்பு தொண்டைகட்டிற்கு வெந்நீரை குடிப்பது நலம் தரும்.

வெந்நீருடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் தொண்டை பிரச்சனைகள் தீரும். இளம் வயது பெண்கள் மற்றும் ஆண்களை தொல்லை செய்யும் முகப்பருக்களுக்கு வெந்நீர் பருகுவதால் அகன்றுவிடும்.

#TamilSchoolmychoice

காலை வேளையில் ஒரு டம்ளர் வெந்நீர் குடித்தால் வயிற்றுவலி சரியாகிவிடும். தினமும் வெந்நீர் குடிப்பதால் பலவித மலச்சிக்கல் பிரச்சனைகள் தீரும்.

warm-glassesவெந்நீரால் இரத்த ஓட்டம் சீராவது மட்டுமின்றி நரம்பு மண்டலத்தின் ஒரத்தில் உள்ள கொழுப்புகளும் குறைந்துவிடும். உடற்பயிற்சி மையத்திற்கு சென்று போராடாமல் எளிதில் உடல் எடையை குறைக்க சிறந்த வழி வெந்நீர் குடிப்பது தான்.

மதியநேர சாப்பாட்டிற்கு பின் சிறிது வெந்நீர் பருகினால் இதயத்தில் சேரக்கூடிய தேவையற்ற கொழுப்புக்களை அகற்றிவிடும் ஆற்றல் கொண்டது.