Home உலகம் பல நாடுகளிலிருந்து 20,000 பேர் ஐஎஸ்ஐஎஸ்-ல் சேர்ந்துள்ளனர் – ஜான் கெர்ரி!  

பல நாடுகளிலிருந்து 20,000 பேர் ஐஎஸ்ஐஎஸ்-ல் சேர்ந்துள்ளனர் – ஜான் கெர்ரி!  

544
0
SHARE
Ad

john kerryவாஷிங்டன், பிப்ரவரி 21 – இந்தியா, பாகிஸ்தான் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 20,000 பேர் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் இணைந்து உலக நாடுகளுக்கு எதிராக போரிட்டு வருகின்றனர் என அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனில், தீவிரவாதத்திற்கு எதிராக நடைபெற்ற அனைத்துலக மாநாட்டில் அவர் கூறியதாவது:- “ஐஎஸ்ஐஎஸ்-ல் இணைந்து, இராக் மற்றும் சிரியாவில் சண்டையிட வழக்கத்தை விட அதிக அளவில் ஆட்கள் செல்கின்றனர்”.

“இராக், சிரியாவில் சண்டை தொடங்கியது முதல், நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து  20,000 பேர் அந்த இயக்கத்தில் இணைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் 1980-களில் சண்டை நடைபெற்றபோது, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 20,000 பேர் அங்கு சண்டையிடச் சென்றனர்”.

#TamilSchoolmychoice

“ஆனால் அந்த எண்ணிக்கையை எட்டுவதற்கு பத்து ஆண்டு காலமாயிற்று. இப்போது, 3-4 ஆண்டுகளிலேயே, சிரியா, இராக்கில் சண்டையிட்டு வரும் வெளிநாட்டவரின் எண்ணிக்கை 20,000 எட்டி உள்ளது. உலக அமைதிக்கும் அரசியல் நம்பகத்தன்மைக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரும் அச்சுறுத்தலாகவே இதனை நாம் பார்க்க வேண்டும்”.

“இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக, 70-க்கும் மேற்பட்ட நாடுகளை ஒன்றிணைத்து புதிய திட்டத்தை உருவாக்க அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது” என்று அவர் கூறியுள்ளார்.