Home 13வது பொதுத் தேர்தல் அரசியல் பிரச்சாரங்களில் ஆணையத்தை உள்ளிழுக்கக் கூடாது – கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நினைவுறுத்தல்

அரசியல் பிரச்சாரங்களில் ஆணையத்தை உள்ளிழுக்கக் கூடாது – கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நினைவுறுத்தல்

648
0
SHARE
Ad

wan

கோலாலம்பூர், மார்ச் 1- வருகிற 13வது பொதுத்தேர்தலில் அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரங்களில் தேர்தல் ஆணையத்தை உள்ளிழுக்க கூடாது என்று ஆணையம் கட்சிகளுக்கு நினைவுபடுத்தியுள்ளது.

தேர்தல் ஆணையம் என்பது ஒரு சார்பற்ற அமைப்பு. அரசியல் கட்சிகளுக்கும், வாக்காளர்களுக்கும் இடையே எந்தவித பாகுபாடும் இன்றி செயல்பட்டு நியாயமான முறையில் தேர்தலை நடத்துவதே அதன் நோக்கமாகும் என்று தேர்தல் ஆணையத்தின் துணைத்தலைவர் டத்தோ வான் அகமட் வான் ஓமர் (படம்) கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

“அமைதியான மற்றும் நியாயமான பொதுத் தேர்தலையே ஆணையம் எதிர்நோக்குகிறது ஆனால் அரசியல் பிரச்சாரங்களின் போதோ அல்லது அதற்கு முன்னரோ தேர்தல் ஆணையம் அதில் தலையிடப்போவதில்லை. காரணம் தேர்தலை நல்ல முறையில் நடத்திக் கொடுக்கவே தேர்தல் ஆணையம் உள்ளது  போட்டியிட அல்ல ” என்று பெர்னாமா செய்தியாளர்களுக்கு டத்தோ வான் அகமட் வான் ஓமர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் , “வெளிநாட்டு வாக்குகள் யாவும் தூதரகங்கள் மூலமாக உலகெங்கும் அனுப்பிவைக்கப்படும் அதேநேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சென்றடைய சிறிது கால அவகாசம் தேவைப்படும் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும் ” என்று தெரிவித்தார்.