மெல்போர்ன், பிப்ரவரி 21 – உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 2–வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி தென்ஆப்பிரிக்காவை நாளை ஞாயிற்றுக்கிழமை எதிர்கொள்கிறது.
பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட்இண்டீஸ், அயர்லாந்து, ஜிம்பாப்வே, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகளும் ‘பி’ பிரிவில் உள்ளன.
இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை 76 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது. 2–வது ஆட்டத்தில் இந்திய அணி தென்ஆப்பிரிக்காவை நாளை ஞாயிற்றுக்கிழமை மலேசிய நேரப்படி காலை 11.15 மணிக்கு எதிர்கொள்கிறது.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அனைத்து துறைகளிலும் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராகவும் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே வீழ்த்த முடியும்.
மேலும் அந்த அணி மிகவும் பலம் பொருந்தியது என்பதால் கடுமையாக போராட வேண்டும். தென்ஆப்பிரிக்காவுடன் மோதிய கடைசி 5 போட்டியில் இந்தியா 1 ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.
மேலும் உலககோப்பையில் அந்த அணியிடம் 3 முறை மோதி தோல்வி அடைந்துள்ளது இந்தியா. இதனால் தென்ஆப்பிரிக்காவின் சவாலை சந்திக்க இந்தியா கடுமையாக போராட வேண்டும்.
கேப்டன் டிவில்லியர்ஸ், ஹசிம் அம்லா, டுமினி, மில்லர், டுபெலிசிஸ் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளன. 3 துறைகளிலும் அபாரமாக திகழ்கிறது தென்ஆப்பிரிக்க ஆணி.
தென்ஆப்பிரிக்காவுக்கு எல்லா வகையிலும் சவால் கொடுத்து விளையாட இந்திய வீரர்கள் முயற்சிப்பார்கள். இதனால் நாளைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசிய நேரப்படி காலை 11.15 மணிக்கு மெல்போர்னில் தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ், தூர்தர்ஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.