Home கலை உலகம் ஐஸ்வர்யாராய் மீண்டும் ரஜினியுடன் ஜோடி சேருகிறாரா?

ஐஸ்வர்யாராய் மீண்டும் ரஜினியுடன் ஜோடி சேருகிறாரா?

525
0
SHARE
Ad

Rajinikanth-Aishwarya-Raiபுதுடெல்லி, பிப்ரவரி 23 – இந்திய சினிமாவையே உச்சத்திற்கு கொண்டு சென்ற படம் எந்திரன். 2010-ல் வெளியான இப்படத்தின் வசூல் இந்தியளவில் தற்போதும் முதல் 10 இடத்தில் தான் இருக்கிறது.

ரஜினி-ஐஸ்வர்யா என உச்ச நட்சத்திரங்கள் நடித்திருந்த இப்படத்தை, பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியிருந்தார். இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஷங்கர் தீவிரமாக உள்ளாதாகவும், அதிலும் ரஜினியை வைத்து இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் கசிந்துள்ளன.

endhiran-coverpicஆனால் ஐஸ்வர்யா நடிப்பில் இருந்து ஒதுங்கியிருந்ததால் வேறு நடிகையை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் தற்போது மீண்டும் ஐஸ்வர்யா பாலிவுட்டில் நடிக்க தொடங்கியிருப்பதால்,

#TamilSchoolmychoice

அவரையே நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்துள்ளாராம் ஷங்கர். இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என சினிமா வட்டார செய்தி தெரிவித்தது.