புதுடெல்லி, பிப்ரவரி 23 – முக்கிய அமைச்சகங்களில் இருந்து ஆவணங்கள் திருடப்பட்ட விவகாரம் பெறும் சர்ச்சையாக உள்ள பரபரப்பான சூழலில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.
நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டத்தில் குடியசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நிகழ்த்தும் உரையுடன் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியுள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக இருக்கும் என்று நம்புகிறேன் என பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். ஏழைகள் ஒதுக்கப்பட்டோருக்காக பாடுபடுவதே தமது நோக்கம். மேலும் நிதித் தீண்டாமையை ஒழிக்க அரசு உறுதிபூண்டுள்ளது எனவும் தொவித்துள்ளார்.
பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அனைவருக்கும் வீட்டுவசதியை உறுதி செய்ய அரசு உறுதிபூண்டுள்ளது. மேலும் வீட்டுவசதித் தறையில் நேரடி அந்நிய முதலீட்டை அரசு அனுமதித்துள்ளது.
அந்நிய முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. விவசாயிகளின் நலனை பாதுகாக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
பெண்களின் கவுரவத்தைக் காக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது மேலும் பெண்களுக்கு என மருத்துவ உதவி மற்றும் தங்கும் இட வசதி, சட்ட உதவி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
பெண் குழந்தைகள் பாதுகாப்புக்காக சிறப்புத் திட்டத்தை அரசு அமல்படுத்தப்படுகிறது. மேலும் சிறார்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார் பிரணாப் முகர்ஜி.