Home இந்தியா ஜெயலலிதா முதல்வராக தன்னைத் தானே சிலுவையில் அறைந்து கொண்ட கராத்தே நிபுணர்!(காணொளியுடன்)

ஜெயலலிதா முதல்வராக தன்னைத் தானே சிலுவையில் அறைந்து கொண்ட கராத்தே நிபுணர்!(காணொளியுடன்)

681
0
SHARE
Ad

Untitledசென்னை, பிப்ரவரி 24 – தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் தமிழகத்தின் முதல்வராக வேண்டும் என்று ஒருவர் தன்னைத் தானே சிலுவையில் அறைந்து கொண்டுள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ளதால் தனது முதல்வர் பதவியையும், சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார்.

இதையடுத்து ஓ.பி.பன்னீர் செல்வம் தமிழக முதல்வராக பதவியேற்று செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், ஜெயலலிதா இந்த சொத்துக்குவிப்பு வழக்ககில் குற்றமற்றவர் என்று விடுதலையாக வேண்டுமென்று தமிழகத்தின் பல பகுதிகளிலும் அதிமுகவினர் வினோத வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர்.

#TamilSchoolmychoice

Untitled.png,அதேபோல சென்னையில் இன்று ஷிஹான் ஹுசைனி என்ற கராத்தே நிபுணர் சுமார் 15 செ.மீ அளவிலான ஆணிகளை கொண்டு தன்னைத் தானே சிலுவையில் அறைந்து கொண்டுள்ளார்.

சுமார் 6 நிமிடங்களுக்கும் மேலாக சிலுவையில் அறைந்த நிலையில் அவர் இருந்துள்ளார். மேலும்,அவர் ஜெயலலிதா மீண்டும் தமிழகத்தின் முதல்வராக வரவேண்டும் என்ற காரணத்திற்காக இதனை செய்ததாக தெரிவித்துள்ளார்.