Home இந்தியா விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படும் – பிராணப் முகர்ஜி உரையில் உறுதி!

விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படும் – பிராணப் முகர்ஜி உரையில் உறுதி!

580
0
SHARE
Ad

pranab-mukherjeeபுதுடெல்லி, பிப்ரவரி 24 – விவசாயிகளின் நலனுக்காகவே இந்த அரசு செயல்படுகிறது. நிலம் கையகப்படுத்துவதால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், தகுந்த இழப்பீடு, மாற்று இடம் அளிக்கும் வகையில் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் அம்சங்கள் உள்ளன.

சில நடைமுறை சிக்கல்களை குறைக் கும் வகையிலும், முக்கிய திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துவதில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில்தான் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

எந்த வகையிலும் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தான் அவசர சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று அதிபர் பிரணாப் முகர்ஜி உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

மேலும், அவர் உரையில் கூரியதாவது; “வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை கொண்டு வருவதற்கு இந்த அரசு முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மேலும் உள்நாட்டிலும் கருப்பு பண புழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது”.

“உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் ‘மேக் இன் இந்தியா’ என்ற திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பாதுகாப்பு துறை உள்பட அனைத்து துறைகளிலும் உள்நாட்டு உற்பத்திக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது”.

“ரயில்வே, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் அன்னிய முதலீடுகளுக்கான உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டு, பல்வேறு நாடுகள் நமது நாட்டில் முதலீடு செய்வதற்கு அதிக வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது”.

“நகர்ப்புற வளர்ச்சியை மனதில் கொண்டு, தேசிய நகர்புற வளர்ச்சி திட்டம் கொண்டுவரப்படுகிறது. நாடாளுமன்றத்தின் இந்த கூட்டத்தை புதிய எதிர்பார்ப்புடன், நம்பிக்கையுடன் தொடங்கியுள்ளோம்”.

“மக்களுக்கு பலன் அளிக்கக் கூடிய பல நல்ல ஆக்கப்பூர்வமான விவாதங்கள் இங்கு நடைபெறும் என்று எதிர்பார்க்கிறேன். ஜனநாயகத்தின் கோயிலாக விளங்கும் நாடாளுமன்றத்தின் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்”.

“நாட்டின் உள்ள அனைத்து மக்களின் தேவைகளை, எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிய திருப்தி நமக்கு கிடைக்க வேண்டும். நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெற வேண்டும். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான அமைப்பாக இது செயல்பட வேண்டும் என்பதே இந்த அரசின் நோக்கமாகும்”.

“அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு அளித்து, பரஸ்பரம் விவாதித்து பல்வேறு சட்டங்களை கொண்டு வர வேண்டும்”.

“நாட்டு மக்களின் தேசப்பற்றை ஒருங்கிணைத்து, புதிய வலுவான, நவீன இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கு பெற வேண்டும்” என பிரணாப் முகர்ஜி பேசினார்.