Home கலை உலகம் ‘காக்கி சட்டை’ படத்தால் சிவகார்த்திகேயன் – தனுஷ் சண்டையா?

‘காக்கி சட்டை’ படத்தால் சிவகார்த்திகேயன் – தனுஷ் சண்டையா?

667
0
SHARE
Ad

Dhanush_9_udexv_Indya101(dot)comசென்னை, பிப்ரவரி 24 – சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘காக்கி சட்டை’ படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. ஆனால் படம் வெளியாகும் முன்னர் படத்தின் தயாரிப்பாளர் தனுஷுக்கும், சிவகார்த்திகேயனுக்கும் சண்டை என்ற செய்தி ஊடகங்களில் பரவி வருகிறது.

சமீபத்தில் நடந்த ஒரு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில், சிவகார்த்திகேயன் வந்ததும், தனுஷ் வெளியேறி இருக்கிறார் என்ற செய்தி வந்தது. அந்த செய்தி குறித்து சிவகார்த்திகேயன் கூரியபோது; எங்களுக்குள் எந்த சண்டையும் இல்லை என்று பதில் அளித்திருந்தார்.

ஆனாலும் இந்த பிரச்சனை ஓயவில்லை. தற்போது இவர்களின் சண்டை குறித்து ஒரு செய்தி வந்துள்ளது. அதாவது ‘காக்கி சட்டை’ படத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியைப் போல சில காட்சிகள் வைக்க இயக்குநரை சிவகார்த்திக்கேயன் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

இதற்கு இயக்குனர் மறுத்ததாகவும், இதுபற்றி தயாரிப்பாளர் தனுஷுடம் புகார் கூறியதாகவும், இதனால் தான் சிவகார்த்திகேயன் மீது கோபத்தில் இருப்பதாகவும் செய்தி ஊடகங்களில் பரவி வருகிறது.