Home நாடு எம்எச்370-வுக்கு நினைவு அஞ்சலி: சீனா, ஆஸ்திரேலியாவுடன் மலேசியா பேச்சுவார்த்தை!

எம்எச்370-வுக்கு நினைவு அஞ்சலி: சீனா, ஆஸ்திரேலியாவுடன் மலேசியா பேச்சுவார்த்தை!

595
0
SHARE
Ad

Liow-Tiong-Laiஜார்ஜ் டவுன், பிப்ரவரி 24 – மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் எம்எச்370 மாயமாகி வரும் மார்ச் 8-ம் தேதியோடு 1 வருடம் நிறைவடைவதால், நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்வை மாஸ் நிறுவனம் ஏற்பாடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சீனாவின் பெய்ஜிங் நகரிலும், ஆஸ்திரேலியாவின் கேன்பெரா நகரிலும் இதே போன்ற நினைவு அஞ்சலி நிகழ்வை நடத்தவும் தற்போது பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக மலேசியப் போக்குவரத்துத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய் கூறியுள்ளார்.

என்றாலும், “நாங்கள் இன்னும் எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை. சீனாவுடனும், ஆஸ்திரேலியாவுடனும் கலந்தாலோசிக்க வேண்டும். காரணம் இதில் சில ஒப்பந்தங்கள் உள்ளன. எம்எச்370 குறித்த எந்த ஒரு நிகழ்விற்கும் அவர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும்” என்று சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட பின்னர் லியாவ் தியாங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

227 பயணிகளுடன் கடந்த வருடம் மார்ச் 8-ம் தேதி, அதிகாலை சீனாவில் பெய்ஜிங் நோக்கிப் பறந்த மலேசிய விமானம் எம்எச்370 நடுவானில் மாயமானது. அனைத்துலக அளவில் தேடுதல் வேட்டை நடத்தியும் விமானத்தின் சிறு பாகம் கூட இதுவரை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.