Home உலகம் மீண்டும் 56 கிறிஸ்துவர்களை கடத்திய ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்!

மீண்டும் 56 கிறிஸ்துவர்களை கடத்திய ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்!

566
0
SHARE
Ad

ShowImage-1டமாஸ்கஸ், பிப்ரவரி 25 – தெற்கு சிரியாவின் அருகில் உள்ள அல்கசாகா நகரில் சிறுபான்மை இனத்தை சேர்ந்த 56 சிரியா கிறிஸ்துவர்களை பிணய கைதிகளாக ஐ.எஸ்.பயங்கரவாதிகள் கடத்தி சென்றுள்ளதாக அந்நாட்டு மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

கடத்தப்பட்டவர்களில் 10-க்கும் மேற்பட்டவர்கள் தல் குர்மாஸ் நகரிலிருந்தும் மற்றவர்கள் தல் ஷமிராம் நகரிலிருந்தும் அடுத்தடுத்து கடத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

edlSAO6சமீபத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தி செல்லப்பட்ட 20 கிறிஸ்தவர்களின் தலை துண்டித்துக் கொல்லப்பட்ட நிலையில், தற்போது கடத்திச் செல்லப்பட்ட 56 கிறிஸ்தவர்களின் நிலை என்னவாகும் என்பது உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.