Home இந்தியா தன்னைத் தானே சிலுவையில் அறைந்து கொண்ட கராத்தே நிபுணருக்கு ஜெயலலிதா கடிதம்!

தன்னைத் தானே சிலுவையில் அறைந்து கொண்ட கராத்தே நிபுணருக்கு ஜெயலலிதா கடிதம்!

531
0
SHARE
Ad

hus02சென்னை, பிப்ரவரி 25 – தன்னைத் தானே சிலுவையில் அறைந்து கொண்ட கராத்தே வீரர் ஹுசைனிக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் வரவேண்டும் என்ற காரணத்திற்காக சென்னையில், கராத்தே வீரர் ஹுசைனி தன்னைத் தானே சிலுவையில் அறைந்து கொண்டு சுமார் 7 நிமிடங்கள் இருந்தார்.

இதையடுத்து அவருக்கு முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்,

#TamilSchoolmychoice

“அன்புக்குரிய ஹுசைனி, தடைகளைத் தகர்த்து தமிழக முதல்வராக நான் மீண்டும் வரவேண்டும் என்பதற்காக சிலுவையில் அறைந்து கொள்ளும் வலி மிகுந்த காரியத்தைச் செய்துள்ளீர்கள்”.

news_24-02-2015_46hus01”உங்கள் உற்சாகத்தைப் பாராட்டுகிறேன், அதே வேளையில் தன்னைத்தானே வருத்திக் கொள்ளும் இத்தகைய செயல்களைத் தவிர்க்க வேண்டும்”.

“இருப்பினும், என் நலன் மீது நீங்கள் காட்டிய அக்கறைக்கு நன்றி. அதேபோல் உங்கள் நலன் மீதும் அக்கறை செலுத்துமாறு அறிவுறுத்துகிறேன்”.

மேலும், “இதுபோன்ற உயிருக்கு ஆபத்தான காரியங்களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்” என்று ஜெயலலிதா அந்த கடிதம் எழுதியுள்ளார்.