Home தொழில் நுட்பம் திறன்பேசிகளில் ஜிபிஎஸ் இல்லாமலே நம்மை கண்காணிக்க முடியும்!

திறன்பேசிகளில் ஜிபிஎஸ் இல்லாமலே நம்மை கண்காணிக்க முடியும்!

662
0
SHARE
Ad

6-gps-tracking-mobile-trackingவாஷிங்டன், பிப்ரவரி 26 – திறன்பேசிகள் மற்றும் நவீன தொழில்நுட்ப கருவிகளில் இருக்கும் ‘ஜிபிஎஸ்’ (GPS) வசதி பற்றி பலரும் அறிந்த ஒன்றே.

‘க்ளோபல் பொசிஷனிங் சிஸ்டம்’ (Global Positioning System) என்ற இந்த தொழில்நுட்பம் மூலம் உலகின் அனைத்து இடங்கள் பற்றியும், அதன் பருவநிலைகள் பற்றியும் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும்.

மேலும், நாம் நமது திறன்பேசிகளில் இந்த ஜிபிஎஸ் வசதியை செயல்படுத்தி இருந்தால், மற்றவர்களால் நமது இடம் பற்றிய விவரங்களை மிக எளிதாக கண்டறிய இயலும். இந்த வசதியில் நன்மைகள் பல இருந்தாலும், தனிநபரின் தனிமை மிக அதிகமாக பாதிப்பிற்குள்ளாகிறது.

#TamilSchoolmychoice

இதனால் பலரும் இந்த வசதியை பெரும்பாலான வேளைகளில் செயல்படுத்துவதில்லை. இந்நிலையில் ஜிபிஎஸ் வசதி இல்லாமலேயே திறன்பேசிகளை கண்காணிக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

திறன்பேசியின், மின்கலன் (பேட்டரி)-ல் இருந்து எந்த அளவிற்கு மின்சக்தி உபயோகப்படுத்தப்படுகிறது என்பதைக் கொண்டு அந்த திறன்பேசியினை பயன்படுத்துபவர் எங்கிருக்கிறார் என்பதை கண்டுபிடித்து விடக்கூடிய ஆபத்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஸ்டான்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறியதாவது:- “ஒரு திறன்பேசியின் செயல்பாடுகளுக்கும் அதனுடைய மின்சக்தி பயன்பாட்டு விவரங்களுக்கும் நேரடி தொடர்பு உண்டு.”

“இது தொடர்பாக மேலும் நடந்த ஆராய்ச்சியில், யான் மிக்கேல்விஸ்கி என்ற ஆராய்ச்சியாளர் திறன்பேசிகளின் மின் நுகர்வு பற்றி முழுமையாக ஆராய்ந்தார்.

“ஆராய்ச்சியின் முடிவில் ‘பவர்ஸ்பை’ (PowerSpy) என்ற அண்டிரொய்டு செயலி ஒன்றை குழுவின் உதவியோடு வடிவமைத்துள்ளார். ”

“அதை சோதித்து பார்த்தபோது ஜிபிஎஸ் இல்லாமலேயே அந்த திறன்பேசி எந்த அளவுக்கு பேட்டரியை பயன்படுத்தியிருக்கிறது என்பதை வைத்து 93 சதவீதம் வரை துல்லியமாக இடத்தைக் கண்டுபிடித்து விட முடிந்தது.”

“குறிப்பாக, 43 முறை சோதனை செய்ததில் 14 கிலோ மீட்டர்கள் தொலைவு வரை 4 வித்தியாசமான திசைகளில் இடம் பற்றிய விவரங்களை துல்லியமாக அந்த செயலி தெரிவித்துள்ளது. எனவே திறன்பேசிகளை எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும்” என்று அந்த ஆராய்ச்சிக்குழு அறிவுறுத்தியுள்ளது.