அசென், பிப்ரவரி 27 – நெதர்லாந்து நாட்டில் அருங்காட்சியகம் ஒன்றில் இருந்த பழங்கால புத்தர் சிலையை ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தியதில், அதில் 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்த துறவி ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
நெதர்லாந்தின் அசென் நகரிலுள்ள டெரெண்ட்ஸ்(Drents) அருங்காட்சியகத்தில் இருந்த புத்தர் சிலையை அதிநுட்பமான ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தினர்.
அந்த பரிசோதனையில், புத்தர் சிலைக்கு உள்ளே மனித எலும்புக்கூடு ஒன்று இருப்பது கண்டறியப்பட்டது. அதனை மேலும் பரிசோதனைக்கு உட்படுத்தியதில் சீனத்துறவி ஒருவரின் உடலை அமர்ந்த நிலையில் பதப்படுத்தி, அதன் மேல் புத்தர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், “இந்த எலும்புக்கூடுகளை ஆய்வு செய்ததில், இவர் சீனாவில் புகழ்பெற்ற ‘சோகுஷின்புட்சு’ (Sokushinbutsu) என்ற கலையை பயில்வித்த ‘மாஸ்டர் லியுகுவான்’ (Master Liuquan) என்ற துறவியாய் இருக்க வாய்ப்புள்ளது.
இவர் இறப்பிற்கு பின், இவரது உடல் புத்தர் சிலைக்குள் வைக்கப்பட்டு இருக்கலாம் அல்லது இவரே அமர்ந்த நிலையில் இறந்து புத்தர் சிலையை அமைக்க கூறியிருக்கலாம். எனினும் இதை உறுதி செய்ய எலும்புக்கூட்டின் ஒரு பகுதியை மரபணு சோதனைக்கு அனுப்பியுள்ளோம்” என்று கூறியுள்ளனர்.