Home உலகம் கிரிக்கெட்: ஸ்காட்லாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது ஆப்கானிஸ்தான்!

கிரிக்கெட்: ஸ்காட்லாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது ஆப்கானிஸ்தான்!

519
0
SHARE
Ad

Afghanistan-cricket-l-apடுனிடின், பிப்ரவரி 27 – உலக கோப்பை போட்டிகளில் 17-வது ஆட்டம் நேற்று காலை நடைபெற்றது. அதில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள ஸ்காட்லாந்தும், ஆப்கானிஸ்தானும் மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 210 ரன்கள் எடுத்தது.

Scotland-l-apஅந்த அணியில் மச்சான், ஹக் ஆகியோர் அதிகபட்சமாக தலா 31 ரன்கள் எடுத்தனர். பின்னர் வெற்றிக்கு 211 ரன்கள் தேவை என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது.

#TamilSchoolmychoice

48-வது ஓவர் முடிவில் 197 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கடைசி வரிசை ஆட்டக்காரர்களான இருவரும் அடுத்த 9 பந்துகளில் 14 ரன்கள் சேர்த்து ஆப்கன் அணிக்கு உலக கோப்பை போட்டிகளில் முதல் வெற்றியை தேடித்தந்தனர்.