Home கலை உலகம் கணவருடன் சேர வேண்டும் – கவிஞர் தாமரை மகனுடன் உண்ணாவிரதம்!

கணவருடன் சேர வேண்டும் – கவிஞர் தாமரை மகனுடன் உண்ணாவிரதம்!

1190
0
SHARE
Ad

thamarai_son001சென்னை, பிப்ரவரி 27 – தமிழ் சினிமாவில் பெண் கவிஞர் என்றால் நாம் அனைவருக்கும் ஞாபகம் வருபவர் தாமரை. இயக்குனர் சீமானால் ‘இனியவளே’ என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் கவிஞர் தாமரை.

கௌதம் மேனனின் ‘மின்னலே’ படம் தொடங்கி ‘என்னை அறிந்தால்’ வரை அனைத்து படங்களிலும் பாடல்கள் எழுதியுள்ளார். கவிஞர் தாமரையின் கணவரான தியாகு, சில மாதங்களுக்கு முன் அவரை விட்டு பிரிந்து எங்கோ சென்றுவிட்டார்.

thiyagu-thamarai5-300இந்நிலையில், தன்னையும், தன் மகனையும் தவிக்கவிட்டு சென்ற தனது கணவரை கண்டுபிடித்து தரக் கோரி தாமரை திடீரென்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

சென்னை, சூளைமேடு பெரியார் பாதை அருகே தாமரை போராட்டம் செய்து வருவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.