Home இந்தியா இந்தியா எங்கள் மதம், எங்கள் மத புத்தகம் இந்திய அரசியல் சட்டம் – மோடி

இந்தியா எங்கள் மதம், எங்கள் மத புத்தகம் இந்திய அரசியல் சட்டம் – மோடி

717
0
SHARE
Ad

modiபுதுடெல்லி, பிப்ரவரி 28 – மதவாதிகளை நான் ஊக்குவிக்க மாட்டேன். என் அரசின் மதம், இந்தியா தான். எங்கள் மத புத்தகம் இந்திய அரசியல் சட்டம். எங்கள் பக்தி, பாரத் பக்தி தான்.

எங்கள் பிரார்த்தனை எல்லாரும் நன்றாக வாழ வேண்டும் என்பதே.அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு எல்லா மதத்தினரும் முழு உரிமையுடன் இருக்கலாம். அதற்கு நான் உறுதி அளிக்கிறேன்.

மத பாகுபாட்டை நான் ஏற்கவில்லை. அந்த உரிமையை யார் கையிலும் நான் கொடுக்கவும் இல்லை. அதை  அனுமதிக்கவே மாட்டேன். வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியர்கள் நாம்.

#TamilSchoolmychoice

இதில் யாரும் உயர்வு கிடையாது; தாழ்வும் கிடையாது. எல்லா மதங்களும் வளர வேண்டும். மூவர்ணம் மட்டும் தான் இந்தியா; எந்த வர்ணமும் இங்கு கிடையாது என மோடி நேற்றைய நாடாளுமன்ற அவையில் தெரிவித்தார்.