Home உலகம் அமெரிக்காவில் பனிக்கட்டிகளுக்கு நடுவே 3000 அடி விமான ஓடுதளம்!

அமெரிக்காவில் பனிக்கட்டிகளுக்கு நடுவே 3000 அடி விமான ஓடுதளம்!

564
0
SHARE
Ad

Western Weatherநியூ ஹேம்ப்ஷயர், மார்ச் 2 – விமான விபத்துகள் பெரும்பாலும் அவசரமாக தரையிறக்கப்படும் போது தான் நடைபெறுகின்றன. அத்தகைய சூழலில் விமானம் கடல், ஆறு போன்ற நீர்ப்பரப்புகளில் தரையிறக்கப்படுகிறது.

நிலப்பரப்பில் உயிர்சேதமும், பொருட்சேதமும் நடைபெறாமல் இருக்கவே இத்தகைய நடைமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. அப்படி தரை இறக்கப்படும் நீர்நிலையின் மீது ஒரு விமான ஓடுதளம் இருந்தால்?

இந்த யோசனையின் அடிப்படையில், அமெரிக்காவின் நியூ ஹேம்ப்ஷயரில் உறைந்த நிலையில் இருக்கும் வின்னிபெசாகி ஏரியின் மீது அப்படிப்பட்ட விமான ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

airport_apஅமெரிக்காவின் கீழ்ப்பகுதியில் உள்ள 48 மாநிலங்களில் நியூ ஹேம்ப்ஷயர் மட்டும்தான் உறைந்திருக்கும் பனியின் மீது இத்தகைய ஓடுதளம் அமைக்க மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

மோசமான வானிலை காரணமாக பல குளிர்காலங்களில் திறக்கப்படாமல் இருந்த ‘ஆல்டன் பே’ (Alton Bay) எனும் இந்த விமான ஓடுதள மையம் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

அவசரகாலத்தில் பனி ஓடுதளத்தில் விமானத்தை தரையிறக்குவது புதிய அனுபவமாக இருந்தாலும், மோசமான பனிமூட்டம் காரணமாக விமான விபத்துகள் நடக்கும் அபாயம் இருப்பதாக விமானிகள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.