Home இந்தியா ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: மாறன் சகோதரர்கள் இன்று டெல்லி நீதிமன்றத்தில் ஆஜராக வாய்ப்பு!

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: மாறன் சகோதரர்கள் இன்று டெல்லி நீதிமன்றத்தில் ஆஜராக வாய்ப்பு!

720
0
SHARE
Ad

maran_dayanidhiபுதுடெல்லி, பிப்ரவரி 2 – ஏர்செல் மேக்சிஸ் வழக்கு விசாரணை தொடர்பாக மத்திய முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரர் கலாநிதி மாறன் உள்ளிட்ட 8 பேர், டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜராவார்கள் எனத் தெரிகிகிறது.

ஏர்செல் நிறுவன பங்குகளை, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்க சிவசங்கரனை மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் கட்டாயப்படுத்தியதாகவும், அதன் மூலம், சன் குழுமம் ஆதாயம் அடைந்ததாகவும் 2-ஜி வழக்கில் சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகையிலும் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, தயாநிதி மாறன், கலாநிதி மாறன், மலேசிய தொழிலதிபர் அனந்த கிருஷ்ணன் ஆகியோருக்கும், 5 நிறுவனங்களுக்கும் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி கடந்த ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார்.

#TamilSchoolmychoice

இதை எதிர்த்து மாறன் சகோதரர்கள் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டதால், அவர்கள் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.