Home கலை உலகம் பிரபல இந்தி நடிகை சோனம் கபூருக்கு பன்றிக் காய்ச்சல்!

பிரபல இந்தி நடிகை சோனம் கபூருக்கு பன்றிக் காய்ச்சல்!

581
0
SHARE
Ad

Sonam-Kapoor-Wallpapers-HDகுஜராத், மார்ச் 2 – பிரபல இந்தி நடிகை சோனம் கபூர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் நடந்து வரும் படப்பிடிப்பில் இருந்த சோனம் கபூருக்கு சில நாட்களுக்கு முன் காய்ச்சல், தொடர் இருமல், மூச்சுத் திணறல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டார்.

இதையடுத்து அவர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கம் எழுந்ததை தொடர்ந்து, ராஜ்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை நடத்திய போது அவர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே தற்போது அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

#TamilSchoolmychoice

மேலும், சோனம் கபூரின் உடற்பயிற்சியாளர் மூலம் அவருக்கு பன்றிக் காய்ச்சல் தொற்றியிருக்கலாம் என்று ராஜ்கோட் மாவட்ட ஆட்சியர் மணிஷா சந்திரா தெரிவித்துள்ளார். இவர் தனுஷுடன் ராஞ்சனா படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.