Home நாடு எம்எச்370 தேடுதல் பணியை நிறுத்திக் கொள்ள ஆஸ்திரேலியா முடிவு!

எம்எச்370 தேடுதல் பணியை நிறுத்திக் கொள்ள ஆஸ்திரேலியா முடிவு!

547
0
SHARE
Ad

mh370கேனபெரா, மார்ச் 2 – மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணியிலிருந்து ஒவ்வொரு நாடாக பின்வாங்கிக் கொண்டே வந்த நிலையில், 1 வருட தேடுதல் வேட்டைக்குப் பிறகு தற்போது ஆஸ்திரேலியாவும் கையை விரிக்கும் நிலை வந்துவிட்டது.

விரைவில் ஆஸ்திரேலியா தனது தேடுதல் பணியிலிருந்து பின் வாங்கிக் கொள்ளவிருப்பதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகள் ஆஸ்திரேலியா மலேசியா, சீனா ஆகிய மூன்று நாடுகளுக்கிடையில் நடைபெற்று வருவதாகவும் ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் வாரென் ட்ரஸ் தெரிவித்துள்ளார்.

கரடுமுரடான கடற்பகுதியில் 60,000 சதுர அடி கிலோமீட்டர் (23,000 சதுர மைல்) பரப்பிலும்,விமானம் விழுந்து நொறுங்கியதாகக் கருதப்படும் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரின் மேற்குப் பகுதியில் 1000 மைல்கள் வரையிலும் நடைபெற்று வரும் தேடல் பணிகள் எதிர்வரும் மே மாதத்தோடு நிறைவடையும் என்றும் வாரென் ட்ரஸ் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், இந்தியப் பெருங்கடலில் மேலும் 1.1 மில்லியன் சதுர அடி கிலோமீட்டர் பரப்பளவில் தேடுதல் பணிகளை தொடர்வதா? வேண்டாமா?என்பது குறித்து மூன்று நாடுகளும் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்றும் வாரென் ட்ரஸ் தெரிவித்துள்ளார்.

தற்போது பேச்சுவார்த்தைகள் தொடங்கி விட்டன என்றும், தேடுதல் பணிகளை நிறுத்திக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளதாகவும் வாரென் ட்ரஸ் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி, 239 பயணிகளுடன் கோலாலம்பூரில் இருந்து சீனாவில் பெய்ஜிங் நகரை நோக்கிச் சென்ற மலேசியா ஏர்லைன்ஸ் எம்எச்370 விமானம் நடுவானில் மாயமானது. கடந்த 1 வருடமாக அனைத்துலக அளவில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டும் இதுவரை விமானத்தின் சிறு பாகம் கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.