Home உலகம் அமெரிக்காவுடன் போர் – வட கொரிய இராணுவத்திற்கு கிம் ஜோங் கட்டளை!

அமெரிக்காவுடன் போர் – வட கொரிய இராணுவத்திற்கு கிம் ஜோங் கட்டளை!

583
0
SHARE
Ad

img1344952421ப்யாங்யங், மார்ச் 2 – அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுடன் போரிடுவதற்குத் தயாராக இருக்கும்படி வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் தங்கள் நாட்டு இராணுவத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வட கொரியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, சர்ச்சைக்குரிய கடல் பகுதியில் அமெரிக்காவும், தென் கொரியாவும் கூட்டு இராணுவப் பயிற்சியை கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளன.

மேலும், தென் கொரியாவிற்கு தேவையான அணுசக்தி உதவிகளையும் அமெரிக்கா, மறைமுகமாக செய்து வருகிறது. இந்த நிலையில் அவர் தங்கள் நாட்டு இராணுவீரர்கள் மத்தியில் இதுகுறித்து உரையாற்றி உள்ளார்.

#TamilSchoolmychoice

அதில், “பிளவுபட்ட கொரியாவை மீண்டும் ஒன்றிணைப்பதற்கான போரைத் தொடங்குவதற்கான காலம் நெருங்கிவிட்டது. அந்தப் போருக்காக கொரிய இராணுவம் அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். அமெரிக்காவை சுக்குநூறாக்குவதற்கான பயிற்சியை நம் நாட்டு இராணுவம் மேற்கொள்ள வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவும், தென் கொரியாவும் கூட்டு இராணுவப் பயிற்சி மேற்கொள்ளும்போதெல்லாம் அந்த இரு நாடுகளுக்கும் எதிராக வட கொரிய கடுமையான மிரட்டல்களை விடுப்பது வாடிக்கை. த

ற்காப்பிற்காகவே கூட்டு இராணுவப் பயிற்சிகள் மேற்கொள்வதாக அமெரிக்காவும், தென் கொரியாவும் கூறினாலும், அந்தப் பயிற்சிகள் தங்கள் மீது போர் தொடுப்பதற்கான ஆயத்தம் என வட கொரியா குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.