Home இந்தியா அமெரிக்காவுக்கான இந்திய தூதராக அருண் சிங் தேர்வு!

அமெரிக்காவுக்கான இந்திய தூதராக அருண் சிங் தேர்வு!

729
0
SHARE
Ad

indeபுதுடெல்லி, மார்ச் 2 – அமெரிக்காவுக்கான புதிய இந்தியத் தூதராக அருண் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவுக்கான இந்திய தூதராக இருந்த ஜெய்சங்கர், வெளியுறவுத் துறை செயலராக நியமிக்கப்பட்டார்.

அதைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கான புதிய இந்திய தூதராக அருண் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  தற்போது பிரான்ஸ் நாட்டின் தூதராக உள்ள அருண் சிங் தேர்வு குறித்து அமெரிக்காவுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஒப்புதல் கிடைத்த உடன் அதிகார பூர்வமாக அருண்சிங் பதவி ஏற்பார் என இந்திய அரசு செய்தி வெளியிட்டுள்ளது.