லண்டன், மார்ச் 3 – போர்ப்ஸின் உலக பணக்காரர்கள் பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். இதன் மூலம் கடந்த இருபது வருடத்தில் 16-வது முறையாக அவர் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
‘போர்ப்ஸ்’ (Forbes) பத்திரிகை 2015-ம் ஆண்டிற்கான உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் பில் கேட்ஸின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட 3.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவில் உயர்ந்துள்ளது. இதன் மூலம் அவரின் தற்போதய சொத்து மதிப்பு மொத்தம் 79.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
இவருக்கு அடுத்து 77.1 பில்லியன் டாலர்கள் சொத்துகளுடன் தொலைத்தொடர்பு உலகின் முன்னணி வர்த்தகரான கார்லோஸ் ஸ்லிம் ஹேலு இரண்டாவது இடத்தையும், 72.7 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள சொத்துகளுடன் நிதி நிறுவன அதிபர் வாரன் பப்பெட் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
2015-ம் ஆண்டிற்கான உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்த முதல் 5 பேரின் விவரங்கள்:
1, பில் கேட்ஸ் -79.2 பில்லியன் டாலர்கள்
2, கார்லோஸ் ஸ்லிம் ஹேலு – 77.1 பில்லியன் டாலர்கள்
3, வாரன் பப்பெட் – 72.7 பில்லியன் டாலர்கள்
4, அமன்சியோ ஆர்டிகா – 64.5 பில்லியன் டாலர்கள்
5, லார்ரி எல்லிசயன் – 54.3 பில்லியன் டாலர்கள்