Home உலகம் கிரிக்கெட்: அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 411 ரன்கள் குவிப்பு!

கிரிக்கெட்: அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 411 ரன்கள் குவிப்பு!

472
0
SHARE
Ad

faf-du-plessis-and-hashim-amlaகான்பெரா, மார்ச் 3 – உலக கோப்பை போட்டிகளில் இன்று நடைபெற்ற 24-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவும், அயர்லாந்தும் பலப்பரிட்சை நடத்தி வருகின்றன. இதில் முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களான அம்லாவும், டீ.காக்கும் களமிறங்கினர். 3-வது ஓவரில் 1 ரன்னுக்கு அவுட்டாகிநார் டீ.காக். இதையடுத்து டு பிளிஸ்சிஸ் அம்லாவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமான ஆட்டத்தை கடைபிடித்தனர்.

faf-du-plessis-vs-irelandஅம்லா 33-வது ஓவரில் தனது 20-வது சதத்தை பூர்த்தி செய்தார். 36-வது ஓவரில் டு பிளிஸ்சிசும் சதம் அடித்தார். இதனால் தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 411 ரன்களை குவித்தது.

#TamilSchoolmychoice

மில்லர் 23 பந்துகளை சந்தித்து 46 ரன்களுடனும், ருஸ்சோவ் 30 பந்துகளை சந்தித்து 61 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். வெற்றிக்கு 412 ரன்கள் தேவை என்ற இலக்குடன் அயர்லாந்து அணி விளையாடி வருகிறது.