Home கலை உலகம் நடிகர் அருள்நிதிக்கு திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடந்தேறியது!

நடிகர் அருள்நிதிக்கு திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடந்தேறியது!

681
0
SHARE
Ad

arulnidhiசென்னை, மார்ச் 3 – திமுக தலைவர் கருணாநிதியின் இளைய மகன் மு.க.தமிழரசுவின் மகனும், நடிகருமான அருள்நிதிக்கு திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் சிறப்பாக நடந்தேறியது.

சென்னை தி.நகரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியின் மகள் கீதனாவை அருள்நிதி மணக்கிறார்.

திங்கள்கிழமை நடைபெற்ற இந்த விழாவில் திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், முக அழகிரி உள்பட கருணாநிதி குடும்பத்தினர் பங்கேற்றனர். கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், மகள் கனிமொழி ஆகியோரும் பங்கேற்றனர்.

#TamilSchoolmychoice

கட்சியைவிட்டு நீக்கப்பட்ட மு.க.அழகிரி நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த விழாவில் கலந்துகொண்டார். மனைவி காந்தி அழகிரி, மகன் தயாநிதி அழகிரியுடன் மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார்.

இந்த நிகழ்ச்சியில் முக.அழகிரி, மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டாலும் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. அழகிரியை வரவேற்றுப் பேசிக் கொண்டிருந்தார் முக.தமிழரசு.

கருணாநிதி குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள் மட்டும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பத்திரிகையாளர் உள்பட திரையுலகினர் யாரும் இந்த நிச்சயதார்த்தத்திற்கு அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.