கடந்த ஆண்டு முதல் இடத்தில் சிங்கப்பூரும், அதற்கு அடுத்த நான்கு இடங்களை முறையே பாரிஸ், ஒஸ்லோ, ஜுரிச், சிட்னி ஆகிய நகரங்கள் பிடித்தன. இந்த வருடத்திற்கான பட்டியலிலும் அந்த இடங்களில் எத்தகைய மாற்றமும் ஏற்படவில்லை.
ஈஐயு அமைப்பு அமெரிக்காவின் நியூயார்க் நகரை மையமாக வைத்து உலக அளவில் சுமார் 133 நகரங்களில் இந்த ஆய்வை நடத்தியது. உணவு, உடை, பயன்பாட்டு கட்டணங்கள் மற்றும் பொருளாதாரம் ஆகிய காரணிகளின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
அதில் சிங்கப்பூரை பொருத்தவரை மக்களின் அடிப்படை தேவைகளான உணவு, உடை மற்றும் போக்குவரத்து செலவீனங்கள் உட்பட அனைத்தும் நியூயார்க்கை விட பல மடங்கு அதிகமாகும். எனினும், அதனை ஏற்றுக்கு கொள்ளும் அளவிற்கு சிங்கப்பூர் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது.
அங்கு அடிப்படை மளிகைப் பொருட்கள் நியூயார்க்கை விட 11 சதவீதம் அதிகமாகும். மேலும், சிங்கப்பூர் மக்கள் போக்குவரத்திற்காக செய்யும் செலவுகள் நியூயார்க் வாசிகளை விட மிக அதிகம் என்றும் கூறப்படுகிறது.
வர்த்தகர்களும், வேறு நகரங்களுக்கு குடியேற திட்டமிடுவோரும் குறிப்பிட்ட அந்த நகரங்களின் பொருளாதார முன்னேற்றம், அடிப்படை செலவீனங்கள் போன்றவற்றை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இந்த பட்டியலை பொருளாதார புலனாய்வு பிரிவு எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.