Home வாழ் நலம் உடல் ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் கொடுக்கும் பம்பளிமாஸ் பழம்!

உடல் ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் கொடுக்கும் பம்பளிமாஸ் பழம்!

1591
0
SHARE
Ad

pompelmo-rosa.jpeg.pagespeed.ic.f4MqLLGs18மார்ச் 3 – பம்பளிமாஸ் பழம் சாத்துக்குடி, ஆரஞ்சு வகையைச் சேர்ந்தது. இந்தப் பழம் பச்சை நிறத்தில் பெரிய பந்து போல இருக்கும். முற்றின காயின் மேல் இளம் மஞ்சள் நிறத்தில் மாறும் அதுதான் பழம். இதன் தோல் அழுத்தமாக காணப்படும். உள்ளே ஆரஞ்சுபோல சுளைகள் இருக்கும்.

இந்த வகைப் பழங்களின் குணமும் ஒன்றுதான். இதில் புளிப்பு, இனிப்பு என இரண்டுவகை உண்டு. இதில் புளிப்புவகையை விட இனிப்பு வகையே சிறந்தது. இது அனைத்து காலங்களிலும் கிடைக்காது அதற்கென உள்ள சில மாதங்கள் மட்டுமே கிடைக்கும்.

இது குளிர்ச்சி நிறைந்தது எனவே சளி, இருமல் உள்ளவர்கள் இதனை சாப்பிடக்கூடாது. பம்பளிமாஸ் பழங்கள் யாவும் உடலுக்கு நேரடியாக சத்துக்களை அளிக்க வல்லவை.

#TamilSchoolmychoice

உடலுக்குத் தேவையான புரதச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள் அனைத்தும் இந்த பழங்களில் நிறைந்துள்ளன. இப்பழங்கள் உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுக்கும்.

Grapefruit juice and ripe grapefruitsதினமும் ஒரு பழமோ அல்லது பழக்கலவையோ சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. பம்பளிமாஸ் பழம் ஆரஞ்சு வகையைச் சேர்ந்தது. இந்தப் பழம் மற்றும் சுளைகள் பெரியதாக இருக்கும்.  பித்த அதிகரிப்பை சரி செய்யும் தன்மை பழங்களுக்கும், கீரைகளுக்கும் உண்டு. இதில் பம்பளிமாஸ் பழம் பித்த அதிகரிப்பை வெகு விரைவில் குறைக்கும்.

இப்பழம் கிடைக்கும் காலங்களில் சாப்பிட்டு வருவது நல்லது. கண் பார்வைக் கோளாறுகள் நீங்க வைட்டமின் ‘ஏ’ சத்து அவசியம். இந்த வைட்டமின் ‘ஏ‘ சத்துக் குறைவதால் மாலைக் கண் நோய் ஏற்பட வாய்ப்புண்டு.

இக்குறைகளை களைய பம்பளிமாஸ் பழம் சிறந்த மருந்தாகும். கேரட் எப்படி கண்களை காக்கிறதோ அதேபோல் பம்பளிமாஸ் பழமும் காக்கும். ஈரல் பாதிப்புகளால்தான் காமாலை நோய் உருவாகின்றது.

Benefits-of-Grape-Fruit-How-Grape-Fruit-Helps-in-Weight-Lossஇந்த காமாலை நோயின் தாக்கம் குறைய பம்பளிமாஸ் பழம் நல்லது. இப்பழம் கிடைக்கும் காலத்தில் அதிகம் வாங்கி சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை நோய் ஏற்படாமல் தடுக்கலாம்.

அதிக சூடுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்களின் உடல் வெகு விரைவில் வெப்பமடையும்.  இவர்கள் பம்பளிமாஸ் பழச்சாறு குடித்து வந்தால் உடல் சூடு தணியும். இரத்த சோகையைப் போக்கும் குணம் பம்பளிமாஸ் பழத்திற்கு உண்டு.

இந்தப் பழத்தின் சுளைகளை மதிய உணவுக்குப்பின் தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தச் சோகை குறைபாடு நீங்கும். வருடத்தில் சில மாதங்களே கிடைக்கும் பம்பளிமாஸ் பழத்தை வாங்கி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும்.