Home இந்தியா என்னை மிரட்டி பணிய வைக்க முடியாது – நாடாளுமன்றத்தில் மோடி ஆவேசம்

என்னை மிரட்டி பணிய வைக்க முடியாது – நாடாளுமன்றத்தில் மோடி ஆவேசம்

543
0
SHARE
Ad

modi,புதுடெல்லி, மார்ச் 4 – ‘‘நான் பல அச்சுறுத்தல்கள் மற்றும் நெருக்கடிகளை சந்தித்துள்ளேன். ஜனநாயகத்தில் அச்சுறுத்தல் எடுபடாது; என்னை மிரட்டி பணிய வைக்க முடியாது’’ என எதிர்க்கட்சிகளுக்கு  பிரதமர் மோடி ஆவேசமாக பதில் அளித்துள்ளார்.

காஷ்மீர் முதல்வரின் சர்ச்சை பேட்டி குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என  நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் மாநிலங்களவையில்  அதிபர் பிரணாப் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய மோடி, எதிர்க்கட்சிகளின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் வகையில் ஆவேசமாக பேசினார்.

#TamilSchoolmychoice

மோடி பேசியதாவது; “தீவிரவாதத்தை ஒரு போதும் எனது அரசு பொறுத்துக் கொள்ளாது. காஷ்மீரில் தேர்தல் வெற்றிக்கு காஷ்மீர் மக்கள்தான் காரணம். காஷ்மீர் மக்கள் தைரியத்துடன் வாக்களித்து, இந்தியா இதுவரை கூறி வந்த கருத்துக்களை ஆமோதிக்கும் வகையில் உலகின் சந்தேகத்தை போக்கியுள்ளனர்”.

“இதுபற்றி யாராவது சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருந்தால், அதை ஆதரிக்க முடியாது. காஷ்மீர் மக்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. காஷ்மீரின் ஒற்றுமைக்கு எனது அரசு பாடுபடும்”.

“யாராவது, எங்கோ ஒரு மூலையில் ஏதாவது கருத்து தெரிவித்தால் அதற்கு நாங்கள் இங்கு பதில் அளிக்க வேண்டும் என வற்புறுத்தப்படுகிறது. ஜனநாயகத்தில் அச்சுறுத்தல் எடுபடாது. நான் குஜராத் முதல்வராக இருந்தபோது பல அச்சுறுத்தல்களையும், நெருக்கடிகளையும் சந்தித்துள்ளேன்”.

“அவசரநிலை பிரகடனம் செய்தபோதே இந்த நாடு அதற்கு வளைந்து கொடுக்கவில்லை. என்னை மிரட்டி பணியவைக்க முடியாது” என மோடி பேசினார்.