Home வணிகம்/தொழில் நுட்பம் பினாங்கு முழுவதும் 5 ரிங்கிட் கட்டணம் – ‘மைடேக்சி’ அதிரடி தள்ளுபடி

பினாங்கு முழுவதும் 5 ரிங்கிட் கட்டணம் – ‘மைடேக்சி’ அதிரடி தள்ளுபடி

558
0
SHARE
Ad
MyTeksiLogo

ஜார்ஜ் டவுன், மார்ச் 4 – பினாங்கு தீவில் எங்கு பயணித்தாலும் 5 ரிங்கிட் மட்டுமே என்ற புதிய கவர்ச்சிகரமான அறிவிப்பை செய்துள்ளது வாடகைக் கார் நிறுவனமான ‘மை டேக்சி – MyTeksi’.

இந்த வாடகைக் கார் சேவையை கேப் புக்கிங் செயலி வழியாகவும் பயன்படுத்தி முன்பதிவு செய்யலாம்.

இது குறித்து மை டேக்சி நிறுவனத்தின் பினாங்கு நகர நிர்வாகி லோ ஜி யுவான் கூறுகையில், இந்த தள்ளுபடியை மார்ச் 31-ம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

பினாங்கு டேக்சி ஓட்டுநர்கள் மிகவும் கராரானவர்கள். அளவுக்கு அதிகமாக கட்டணம் விதிக்கின்றனர் என்ற அவப்பெயரை போக்கவே இப்படி ஒரு அதிரடி தள்ளுபடியை அறிவித்திருப்பதாக லோ ஜி யுவான் கூறியுள்ளார்.

மேலும், மக்களின் நன்மதிப்பையும், நம்பிக்கையையும் பெறும் நோக்கிலும் இந்த தள்ளுபடி கட்டணம் அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் லோ ஜி யுவான் குறிப்பிட்டுள்ளார்.

‘மைடேக்சி’ செயலி மூலமாக முன்பதிவு செய்யப்பட்டவர்கள் பினாங்கு தீவு முழுவதும் எங்குவேண்டுமானாலும் இந்த தள்ளுபடி கட்டண சேவையை அனுபவிக்கலாம் என்றும், 24 மணி நேரமும் இந்த சேவை இருக்கும் என்றும் லோ ஜி யுவான் தெரிவித்துள்ளார்.