Home கலை உலகம் கோடம்பாக்கத்தில் கவிஞர் தாமரை 5–வது நாளாக போராட்டம்!

கோடம்பாக்கத்தில் கவிஞர் தாமரை 5–வது நாளாக போராட்டம்!

530
0
SHARE
Ad

tamarai 3(1)சென்னை, மார்ச் 4 – கவிஞர் தாமரை வீட்டை விட்டு வெளியேறிய கணவர் தியாகு மீண்டும் தன்னுடன் சேர்ந்து வாழக்கோரி உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார். ஏற்கனவே சூளைமேடு பகுதியில் இருக்கும் தியாகு அலுவலகத்தில் தர்ணா நடத்தினார்.

அதன் பிறகு தியாகு வசிக்கும் வேளச்சேரி வீட்டு முன்னால் போராட்டத்தை நடத்தினார். அந்த வீட்டில் இருந்தும் தியாகு வெளியேறி விட்டதால் இன்று 5–வது நாளாக கோடம்பாக்கம் அம்பேத்கார் சிலை அருகே உள்ள பூங்காவின் முன் தனது போராட்டத்தை தொடர்ந்தார். தீர்வு கிடைக்கும் வரை தனது போராட்டம் தொடரும் என்று கவிஞர் தாமரை அறிவித்து உள்ளார்.