Home இந்தியா பாலியல் வன்கொடுமைக்கு பெண்களே பொறுப்பு – குற்றவாளியின் ஆணவ பேச்சு!

பாலியல் வன்கொடுமைக்கு பெண்களே பொறுப்பு – குற்றவாளியின் ஆணவ பேச்சு!

473
0
SHARE
Ad

mukesh_singh_002-615x382புதுடெல்லி, மார்ச் 4 – டெல்லி பேருந்து ஒன்றில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலையான  வழக்கின் குற்றவாளி, பாலியல் வன்கொடுமைகள் நடப்பதற்கு பெண்களே அதிக அளவில் பொறுப்பு ஏற்கவேண்டும் என்று கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி டெல்லியில் ஓடும் பேருந்தில் இளம் பெண் ஒருவர் கூட்டு பாலுறவு செய்யப்பட்டு, கொலையான சம்பவத்தில் தண்டனை பெற்றுள்ள குற்றவாளி முகேஷ் சிங், நிர்பயா குறித்து தயாரிக்கப்பட்ட ஆவணப் படம் ஒன்றில் பேசியிருக்கும் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

mukeshsingh1_2329274fஅந்த ஆவணப் படத்தில், முகேஷ் சிங் சிறையில் இருந்தவாறு பேசியுள்ளார். அதில், ” அந்தப்  பெண்ணை நான் பலாத்காரம் செய்யவில்லை. பலாத்காரம் நடந்த போது நான் பேருந்தை ஓட்டிக் கொண்டிருந்தேன். பலாத்கார சம்பவங்களுக்கு ஆண்களை விட பெண்களே அதிகம் பொறுப்பேற்க வேண்டும்”.

#TamilSchoolmychoice

“இரவு நேரங்களில் பெண்கள் வெளியே சுற்றிக் கொண்டிருக்கக் கூடாது.  பலாத்காரத்தின்போது அந்த பெண் எதிர்த்து போராடியிருக்காவிட்டால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது. அவர் போராடியிருக்கக் கூடாது. 20 சதவீத பெண்கள் மட்டுமே நல்லவர்களாக உள்ளனர்”  என்று கூறியுள்ளார்.

delhi rapeமிகக்  கொடூரமான பலாத்கார சம்பவம் பற்றி  குற்றவாளி தெரிவித்துள்ள இந்த கருத்துகள் பல்வேறு சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. இந்தியாவில் நாள் தோறும் எத்தனையோ பாலியல் வன்கொடுமை  சம்பவங்கள் நடந்தேறினாலும் 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவக் கல்வி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.

இங்கிலாந்தைச் சேர்ந்த லெஸ்லி உட்வின் என்பவர் நிர்பயா சம்பவத்தை, “இந்தியாவின் மகள்” என்ற தலைப்பில் ஆவணப் படமாக தயாரித்துள்ளார். இதில் பல முக்கிய விஷயங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆவணப் படத்தில்தான் குற்றவாளி முகேஷ் சிங் சிறையில் இருந்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.