Home உலகம் ரஷ்யாவில் கடும் பொருளாதார நெருக்கடி – புடின் ஊதியம் குறைப்பு! 

ரஷ்யாவில் கடும் பொருளாதார நெருக்கடி – புடின் ஊதியம் குறைப்பு! 

536
0
SHARE
Ad

putinnமாஸ்கோ, மார்ச் 7 – ஐரோப்பிய நாடுகள் விதித்த பொருளாதாரத் தடைகளால், ரஷ்யா மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அதிபர் உள்பட அரசு ஊழியர்கள் பலரின் மாத ஊதியத்தைக் குறைத்துக் கொள்ளும் உத்தரவில் புடின் கையெழுத்திட்டுள்ளார்.

உக்ரைன் விவகாரம் காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன. அதன் விளைவாக ரஷ்யாவின் நாணயமான ரூபிள் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

மேலும், அனைத்துலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளதால், ரஷ்யப் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் உள்ளது. இதனையடுத்து, ஊழியர்களின் ஊதியக் குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை ரஷ்யா எடுத்து வருகின்றது.

#TamilSchoolmychoice

இது தொடர்பான உத்தரவில் புடின் கையெழுத்திட்டுள்ளார். இதன்படி, மார்ச் மாதத்திலிருந்து டிசம்பர் வரை, புடினின் மாத  ஊதியத்தில் 10 சதவீதம் குறைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அமைச்சர்களைவிட குறைவான ஊதியத்தைப் பெற்று வந்த அதிபர் புடினுக்கு கடந்த ஆண்டு ஏறத்தாழ மூன்று மடங்கு அளவுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ரஷ்ய பத்திரிக்கைகள் கூறுகையில், “அதிபர் உட்பட அரசு ஊழியர்கள் மற்றும் அமைச்சர்களின் ஊதிய குறைப்பு வரவேற்கத்தக்கது தான் என்றாலும், மக்கள் அதிபரிடம் எதிர்பார்ப்பது நிரந்தரத் தீர்வுதான் என்பதை புடின் மனதில் கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளன.