Home கலை உலகம் பிரபல ஹாலிவுட் நடிகர் ஹாரிசன் போர்டு விமான விபத்தில் படுகாயம்!(படங்களுடன்)

பிரபல ஹாலிவுட் நடிகர் ஹாரிசன் போர்டு விமான விபத்தில் படுகாயம்!(படங்களுடன்)

599
0
SHARE
Ad

usa-600x300லாஸ் ஏஞ்சல்ஸ், மார்ச் 7 – ‘ஸ்டார் வார்ஸ்’ படங்களில் நடித்து பிரபலமான ஹாலிவுட் நடிகர் ஹாரிசன் போர்டு, விமான விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். பிரபல ஹாலிவுட் நடிகர் ஹாரிசன் போர்டு (வயது 72) ‘ஸ்டார் வார்ஸ்’ படங்களில் விண்வெளி நாயகனாக நடித்து உலகளவில் பிரபலம் அடைந்தவர்.

தொல்பொருள் ஆராய்ச்சி சாகசக்காரராக ஹாரிசன் போர்டு நடித்த ‘ரைடர்ஸ் ஆப் தி லாஸ்ட் ஆர்க்’ படமும் அவருக்கு உலகளவில் பெயரைப் பெற்றுத்தந்தது.அவர் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர், இரண்டாம் உலகப்போர் காலத்தை சேர்ந்த ‘ரேயான் ஏரோநாட்டிக்கல்’ விமானத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் சாந்தா மோனிகா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டார். அடுத்த சில நிமிடங்களில் சற்றும் எதிர்பாராத விதமாக அந்த விமானத்தில் தொழில் நுட்பக்கோளாறு ஏற்பட்டது.

#TamilSchoolmychoice

Harrison Ford plane crashஇதையடுத்து விமானத்தை அவர் புறப்பட்ட இடத்துக்கே திருப்ப முயற்சித்தார். ஆனால் அதற்கு முன்பாகவே அந்த விமானம், அந்த பகுதியில் அமைந்துள்ள கோல்ப் மைதானத்தில் விழுந்து மோதியது. இந்த விபத்தில் ஹாரிசன் போர்டுக்கு தலையில் ஆழமான காயங்கள் ஏற்பட்டு ரத்தம் வழிந்தோடியது.

விபத்து குறித்த தகவல் அறிந்ததும் லாஸ் ஏஞ்சல்ஸ் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது மகன் அருகில் இருந்து கவனித்து வருகிறார்.

விபத்து குறித்து அவர் மகன் பென் போர்டு, ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில், “எனது தந்தை விமான விபத்தில் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்கு பின்னர் இப்போது நலம் அடைந்து வருகிறார். அவர் மிகவும் வலிமையான மனிதர்” என்று கூறி உள்ளார்.

Harrison Ford plane crashவிபத்து தொடர்பாக அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் புலன் விசாரணை அதிகாரி பேட்ரிக் ஜோன்ஸ் கூறுகையில், “என்ஜினில் ஏற்பட்ட பழுதின் காரணமாகத்தான் அந்த விமானம் விபத்துக்குள்ளானது” என்றார்.

கடந்த 1999-ம் ஆண்டு ஹாரிசன் போர்டும், ஒரு பயிற்சியாளரும் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதும், அதில் அவர் உயிர் தப்பியதும் நினைவுகூர தகுந்தது.