Home நாடு 10,000 பேர் கறுப்பு ஆடைகளுடன் இரட்டை கோபுரம் நோக்கி பேரணி!

10,000 பேர் கறுப்பு ஆடைகளுடன் இரட்டை கோபுரம் நோக்கி பேரணி!

605
0
SHARE
Ad

wpid-Selliyal-Breaking-News.pngகோலாலம்பூர், மார்ச் 7 – அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவாக – காவல் துறையின் அனுமதி மறுப்பையும் மீறி –  இன்று நடைபெற்ற எதிர்ப்புப் பேரணியில் ஏறத்தாழ 10,,000 பேர் கலந்து கொண்டனர் என தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கனத்த மழை – அனுமதி தராத காவல் துறை – இவை எல்லாவற்றையும் மீறி இத்தனை பேர் துணிவுடன் கலந்து கொண்டது அன்வார் இப்ராகிமிற்கும் எதிர்க்கட்சிக் கூட்டணிக்கும் இருக்கும் ஆதரவையும், அரசாங்கத்திற்கு எதிராக பெருகி வரும் எதிர்ப்பையும் எடுத்துக் காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தப் பேரணியில் அன்வார் இப்ராகிமின் துணைவியார், வான் அசிசா, மூத்த மகள் நூருல் இசா, இரண்டாவது மகள் நூருல் நூஹா ஆகியோரும் பிகேஆர் கட்சியின் முக்கியத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

(மேலும் செய்திகள் தொடரும்)