Home நாடு அன்வாரை மக்கள் மறக்கவில்லை: பேரணியில் வான் அசிசா நெகிழ்ச்சி

அன்வாரை மக்கள் மறக்கவில்லை: பேரணியில் வான் அசிசா நெகிழ்ச்சி

519
0
SHARE
Ad

கோலாலம்பூர், மார்ச் 8 – எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமை மக்கள் இன்னும் மறக்கவில்லை என பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா தெரிவித்துள்ளார். அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று சனிக்கிழமை நடைபெற்ற பேரணியில், காவல்துறையின் தடையையும் மீறி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

Wan Azizah @ Anwar Rally 7 March 2015அப்போது கூட்டத்தினர் மத்தியில் பேசிய அவர், அன்வாருக்கு மக்களின் ஆதரவு நீடிப்பதை சிறையில் உள்ள அன்வாரிடம் தாம் தெரிவிக்கப் போவதாகக் கூறினார்.

“இங்கு திரண்டு இருக்கும் மக்கள் கூட்டத்தைப் பார்க்கும்போது எத்தனை பேர் அன்வார் குறித்து அக்கறை கொண்டுள்ளனர் என்பது தெரிய வருகிறது. எப்போதுமே நாங்கள் சரணடைய மாட்டோம்,” என்று பலத்த ஆரவாரத்திற்கிடையே கூறினார் வான் அசிசா.

#TamilSchoolmychoice

சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அன்வாரின் ஆதரவாளர்கள் மத்தியில் அவர் பேசியபோது, மழை பெய்தது. எனினும் மழையைப் பொருட்படுத்தாமல் வான் அசிசா பேசியதை மக்கள் கேட்டனர்.

வான் அசிசாவுடன் அன்வார் விடுதலைக்கான பிரச்சாரத்திற்கு தலைமை ஏற்றுள்ள அவரது இளைய மகள் நூருல் நூஹாவும் அப்போது உடன் இருந்தார்.

Anwar Rally 4 - Mar 7 2015

படங்கள்: டுவிட்டர்