Home அவசியம் படிக்க வேண்டியவை துபாய் நில பேர துறையில் இந்தியர்களின் ஆதிக்கம் தொடர்கிறது!

துபாய் நில பேர துறையில் இந்தியர்களின் ஆதிக்கம் தொடர்கிறது!

584
0
SHARE
Ad

துபாய், மார்ச் 8 – துபாயில்  கட்டுமானங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் எனப்படும் நில பேர துறையில் இந்தியர்களின் அதிகம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. 2014-ம் ஆண்டில் துபாய் நில பேரத் துறையில் ஏற்படுத்தப்பட்ட முதலீடுகள் மற்றும் பணப்பரிவர்த்தனைகளின் அடிப்படையில் அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா மற்றும் குவைத் நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவும் அதிக முதலீடுகளை செய்து வருகிறது.

Dubaiதுபாய் நில பேரத் துறை பற்றி ‘ஒமேகா ரியல் எஸ்டேட்’ (Omega Real Estate) நிறுவனம் கூறுகையில், “துபாய் அரசு தொடர்ந்து செயல்படுத்திய வரும் பல்வேறு கொள்கைகள் மற்றும் முயற்சிகளின் விளைவாகவே அதிக முதலீட்டாளர்கள் இங்கு முதலீடுகளை ஏற்படுத்துகின்றனர். அவர்களின் முதலீடுகளுக்கு எவ்வித அச்சுறுத்தல்களும் இல்லாதது அவர்களிடத்தில் துபாய் குறித்து நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறது” என்று தெரிவித்துள்ளது.

வளைகுடா நாடுகளின் கூட்டுறவு சபையின் கணக்கீட்டின் படி, துபாயின் ரியல் எஸ்டேட் துறையில் அரபு எமிரேட்ஸின் வர்த்தகர்கள் அதிக அளவில் முதலீடுகளை ஏற்படுத்துகின்றனர். அவர்களைத் தொடர்ந்து சவுதி அரேபியா மற்றும் குவைத் நாட்டினரும் இந்த துறையில் பெரும் பங்கு வகிக்கின்றனர். துபாய் அரசின் சீரிய முயற்சிகளால் உலகளாவிய நெருக்கடி நிலையிலும் இத்துறையில் எத்தகைய பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

18 பில்லியன் திராம் முதலீடுகள்

கடந்த 2014-ம் ஆண்டின் தொடக்கத்தில் துபாய் ரியல் எஸ்டேட் துறையில் இந்தியர்கள் சுமார் 18 பில்லியன் திராம்களை முதலீடு செய்துள்ளனர். இது அதற்கடுத்தடுத்த மாதங்களில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்துள்ளது.

இது குறித்து ‘தி எச் ஹோல்டிங் எண்டர்ப்ரைஸ்’ (The H Holding Enterprise) நிறுவனத்தின் தலைவர் ஹபீஸ் அப்துல்லா கூறுகையில், “நடப்பு நிதியாண்டு துபாய் ரியல் எஸ்டேட் துறைக்கு பல்வேறு சாதகமான சூழலை ஏற்படுத்தி உள்ளது. நடைபெறும் பணப்பரிவர்த்தனைகளை பார்க்கும் பொழுது துபாய் பன்முகத்தன்மை கொண்டு விளங்குவது தெரிகிறது. வளைகுடா நாட்டினர் மட்டுமல்லாது இந்தியர்களும் இங்கு அதிக முதலீடுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இது துபாய் பற்றிய நம்பகத்தன்மையை காட்டுகின்றது” என்று கூறியுள்ளார்.

துபாய் அரசு இந்த துறையில் நடப்பு நிதியாண்டில் அதிக அக்கறையுடனும், கண்காணிப்புடனும் செய்து வருவதாகவும் இதன் மூலம் கடைநிலை பயனீட்டாளர்கள் அதிக ஊக்கம் பெறுவதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.