Home நாடு “அன்வார் விடுதலைக்காக அனைவரும் போராட வேண்டும்”: அம்பிகா

“அன்வார் விடுதலைக்காக அனைவரும் போராட வேண்டும்”: அம்பிகா

779
0
SHARE
Ad

கோலாலம்பூர், மார்ச் 8 – எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமின் விடுதலைக்காக பொது மக்கள் போராட வேண்டும் என பெர்சே தலைவர் டத்தோ அம்பிகா சீனிவாசன் வலியுறுத்தி உள்ளார்.

நேற்று சனிக்கிழமை கோலாலம்பூரில் நடைபெற்ற பிரமாண்ட பேரணியில் அன்வார் இப்ராகிம் ஆதரவாளர்கள் மத்தியில் பேசியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Supporters of Malaysian opposition leader Anwar Ibrahim hold up an umbrella with a placard reading: 'Undur Najib (Step down Najib)' during a 'Kita Lawan' (Fight Back) rally in Kuala Lumpur, Malaysia, 07 March 2015. About 1,000 people attended the rally aimed at forcing Malaysian Prime Minister Najib Razak to resign for failing in his duties as head of government. The protesters were also demanding the release of opposition leader Anwar Ibrahim who is serving a prison sentence. Anwar Ibrahim on 10 February was sentence of five years imprisonment after a Federal Court rejected his appeal and upheld the conviction of sodomizing his former aide on 26 June 2008.

#TamilSchoolmychoice

சோகோ பேரங்காடி வளாகத்தின் முன் திரண்ட அன்வார் ஆதரவாளர்கள்

“அன்வாரை விடுதலை செய்யுங்கள் என வலியுறுத்தவே இங்கு வந்துள்ளேன். அவரது விடுதலைக்காக நாம் அனைவரும் போராட வேண்டும். நாங்கள் நிச்சயமாக சரணடைய மாட்டோம்,” என்று அம்பிகா உரக்கச் சொன்னார்.

இதையடுத்துப் பேசிய பிகேஆர் இளைஞர் பிரிவுத் தலைவர் சுகைசான் பிரதமர் நஜிப் மிக விரைவில் பதவி விலகுவார் என்றார்.

“நஜிப்பிற்கு ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. ஜி.எஸ்.டி., 1MDB, அல்தான்துயா வழக்கு என பலவும் இருப்பதால் அவர் நீண்ட காலம் பதவியில் இருக்க மாட்டார்,” என்றார் சுகைசான்.

அவர் இவ்வாறு கூறியதை கூடியிருந்த ஆதரவாளர்கள் பலமாக கைதட்டி வரவேற்றனர்.