Home நாடு அன்வாரை அனுமதிக்காததால் போராடுகிறோம் – அஸ்மின் அலி

அன்வாரை அனுமதிக்காததால் போராடுகிறோம் – அஸ்மின் அலி

475
0
SHARE
Ad

azminali-m-600x360கோலாலம்பூர், மார்ச் 10 – நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமை அனுமதிக்காததால், தாங்கள் போராடுவதாக சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.

நேற்று திங்கட்கிழமை, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பெரும்பாலானோர் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக கறுப்பு நிற உடை அணிந்து நாடாளுமன்றத்திற்கு வந்திருந்தனர்.

இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அஸ்மின் அலி, “எனக்கென அதிகாரப்பூர்வ உடை ஏதும் இல்லை,” என்றார்.

#TamilSchoolmychoice

நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அன்வார் பங்கேற்க அனுமதி அளிக்கப்படாததை எதிர்த்துப் போராட இந்த வழிமுறையைப் பின்பற்றுவதாக குறிப்பிட்ட அவர், இது இறுதி முடிவல்ல என்றும், கறுப்பு நிற உடை அணிவது தனி நபர்களின் விருப்பத்தைப் பொறுத்தது எனவும் கூறினார்.

பண்டான் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் ரசிஃபி ரம்லி, எதிர்க்கட்சிகளின் இந்த நூதனப் போராட்டத்தை உறுதிப்படுத்தியதுடன், கூட்டரசுப் பிரதேச நீதிமன்றத்தின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்தும் இப்போராட்டம் நடப்பதாகக் கூறினார்.

“நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அன்வாரின் உரையைப் படிக்க இருக்கிறோம். அதற்கு அனுமதி அளிக்காவிட்டால் அன்வாருக்கு உரிய நீதி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் நீடிக்கும். கறுப்பு நிற ஆடை அணிவது குறித்து அனைத்து கூட்டணிக் கட்சிகளுக்கும் தெரிவித்துள்ளோம். ஐசெகவும் இத்தகைய கடிதத்தை அளித்துள்ளது. எனினும் பாஸ் கட்சியின் முடிவு குறித்து டத்தோ மக்ஃவுசிடம் தான் கேட்க வேண்டும்,” என்றார் ரசிஃபி ரம்லி.

இது குறித்து பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ மக்ஃவுஸ் ஓமாரிடம் கேட்டபோது, பிகேஆர் தரப்பிடமிருந்து எந்த ஒரு கடிதமும் தனக்குக் கிடைக்கவில்லை என்றும், ஆஸ்திரேலிய பயணம் முடிந்து தற்போது தான் நாடு திரும்பி இருப்பதாகவும் தெரிவித்தார்.