Home நாடு அன்வாரை விடுவிக்க கூறும் மனுவை வெள்ளை மாளிகை அகற்றியது!

அன்வாரை விடுவிக்க கூறும் மனுவை வெள்ளை மாளிகை அகற்றியது!

416
0
SHARE
Ad

White house pettionகோலாலம்பூர், மார்ச் 10 – அன்வாரை சிறையில் இருந்து விடுவிக்கக் கோரும் இணைய கோரிக்கை மனுவை, விதிமுறைகளை மீறிய காரணத்திற்காக வெள்ளை மாளிகை நீக்கியதாகக் கூறப்படுகின்றது.

“நீங்கள் திறக்க நினைக்கும் இணைய கோரிக்கை மனு, விதிமுறைகளை மீறிய காரணத்தால் இந்த தளத்தில் இருந்து நீக்கப்படுகின்றது” என்று அந்த சம்பந்தப்பட்ட மனுவை திறக்க முயற்சி செய்யும் பொழுது தகவல் கிடைக்கின்றது.

அமெரிக்காவிற்கும், மலேசியாவிற்கும் இடையிலான கொள்கைகளின் அடிப்படையில், அன்வாரை சிறையில் இருந்து விடுதலை செய்ய வெள்ளை மாளிகை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அமெரிக்கரான ஜெ.எம்.அலெக்சாண்ட்ரா, விர்ஜினியா என்ற நபரால் http://petitions.whitehouse.gov. என்ற அந்த இணையத்தளத்தில் இந்த மனு திறக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

வரும் மார்ச் 15-ம் தேதிக்குள் 100,000 கையெழுத்துக்களை இக்கோரிக்கை மனு பெற்றால், வெள்ளை மாளிகை இதற்கு அதிகாரப்பூர்வ பதிலளிக்கும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், மார்ச் 15-ம் தேதிக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், அம்மனு இன்று அகற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனினும், மனுதாரர்கள், மனு அகற்றப்பட்டது குறித்த காரணத்தை கேட்க முழு உரிமை உள்ளதாகக் கூறப்படுகின்றது.