கோலாலம்பூர், மார்ச் 10 – எம்எச்370 விமானம் மாயமாகி ஓர் ஆண்டு நிறைவடைந்துவிட்ட நிலையில், மேற்கு ஆஸ்திரேலியா கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட மாஸ் சின்னம் கொண்ட ‘காகித துண்டு – Paper towel’ பொட்டலம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியா ஏர்லைன்ஸ் சின்னம் பொறிக்கப்பட்ட அந்த பொட்டலம் விமானத்தில் மட்டுமே பயன்படுத்தக் கூடிய ஒன்று. அதை மேற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தம்பதிகள் கடந்த வரும் ஜூலை மாதம் கண்டெடுத்துள்ளனர்.
தற்போது அந்த பொட்டலத்தை கைப்பற்றியுள்ள காவல்துறையினர், அது எம்எச்370 விமானத்தின் பொருள் தானா? என்பது குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த பொட்டலம் கண்டுபிடிக்கப்பட்ட செர்வண்டெஸ் கடற்கரை, இந்தியப் பெருங்கடலில் தற்போது எம்எச்370 விமானத்தை தேடும் பணி நடந்து வரும் இடத்திலிருந்து 1850 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே, அந்த பொட்டலம் காணாமல் போன விமானத்தின் முக்கியத் தடயமாக இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.
‘