Home உலகம் கிரிக்கெட்: ஐக்கிய அரபு அணியை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது தென்ஆப்பிரிக்க!

கிரிக்கெட்: ஐக்கிய அரபு அணியை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது தென்ஆப்பிரிக்க!

470
0
SHARE
Ad

AB-de-Villiers-of-South-Africa-is-congratulated-by-team-mates1வெலிங்டன், மார்ச் 13 – உலகக் கோப்பை லீக் போட்டியில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்சை 146 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வீழ்த்தியது. உலக கோப்பையில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள தென் ஆப்பிரிக்கா-யு.ஏ.இ அணிகள், வெலிங்டனில் நேற்று பலப் பரிட்சை நடத்தின.

டாஸ் வென்ற யு.ஏ.இ, பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 341 ரன்கள் குவித்தது. இரண்டாவது பேட்டிங் செய்த எமிரேட்ஸ் 195 ரன்களுக்கு சுருண்டதால், தென் ஆப்பிரிக்கா 146 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

amla-beamer-uaeதென் ஆப்பிரிக்க தரப்பில், மோர்கல், பிளேண்டர், டி வில்லியர்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருதை டி.வில்லியர்ஸ் தட்டிச் சென்றார். இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி கால் இறுதிக்கு தகுதி பெற்றது.

#TamilSchoolmychoice