Home நாடு தலைவர் பதவிக்கு போட்டியை எதிர்கொள்ளத் தயார் – ஹாடி அவாங்

தலைவர் பதவிக்கு போட்டியை எதிர்கொள்ளத் தயார் – ஹாடி அவாங்

564
0
SHARE
Ad

Hadi Awang.கோலாலம்பூர், மார்ச் 13 – தலைவர் பதவிக்கு தமக்கு போட்டி நிலவும் பட்சத்தில் அதை எதிர்கொள்ளத் தயார் என பாஸ் கட்சி தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் தெரிவித்துள்ளார்.

பாஸ் கட்சியின் அரசியல் சாசனப்படி, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தலைவர், துணைத் தலைவர் மற்றும் மூன்று உதவித் தலைவர்கள் கட்சியின் பொதுக் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

“பொதுக் குழு இன்னும் தொடங்கவில்லை. எனவே நாம் காத்திருக்க வேண்டும். ஒருவேளை போட்டியாளர்கள் இருந்தால் அவர்கள் நிச்சயமாக என்னை எதிர்த்து போட்டியிடலாம்,” என்று வியாழக்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசியபோது ஹாடி அவாங் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

சிலாங்கூரில் உள்ள 22 பாஸ் தொகுதிகளுக்கான பொதுக் குழு மார்ச் 15ஆம் தேதி தொடங்க உள்ளது. இச்சமயம் கிளைகள், தொகுதிகள் மற்றும் தேசிய அளவிலான பொறுப்புகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

தலைவர் பதவியை உலாமாக்கள் குழுவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே வகிக்க வேண்டும் என்று அவசியம் அல்ல என பாஸ் மத்திய செயலவை உறுப்பினர் காலிட் சமாட் வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து ஹடி அவாங்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அவர், “இது குறித்து கட்சி உறுப்பினர்களிடம்தான் கேட்க வேண்டும். என்னிடம் கேட்காதீர்கள். ஏனெனில் என்னை நானே தேர்ந்தெடுத்துக் கொள்ளவில்லை,” என்றார்.