Home இந்தியா புதிய தலைமுறை அலுவலகம் மீது தாக்குதல்: வைகோ, ஸ்டாலின் கண்டனம்!

புதிய தலைமுறை அலுவலகம் மீது தாக்குதல்: வைகோ, ஸ்டாலின் கண்டனம்!

618
0
SHARE
Ad

stalinசென்னை, மார்ச் 13 – புதிய தலைமுறை அலுவலகம் மீதான குண்டு வீச்சு, கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல் என்று தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தா

க்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகம் மீது நேற்று முந்தினம் மர்மநபர்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.

இது மிகவும் கண்டிக்கத்தக்க செயல் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார். பத்திரிகை சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுக்க முயற்சிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் கோரியுளளார்.

#TamilSchoolmychoice

ஸ்டாலின் எச்சரிக்கை வன்முறையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்காமல், மத அடிப்படைவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் அதிமுக அரசு மெத்தனமாக செயல்படுவதாகவும் ஸ்டாலின் சாடியிருக்கிறார். தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக வைக்கோ கூறியதாவது: “புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகத்தின் மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்திய செயல் வன்முறை வெறியாட்டம் ஆகும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்”.

“புதிய தலைமுறை தொலைக்காட்சி நிலையத்தின் முன் இந்துத்துவா அமைப்புகள் ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் தொலைக்காட்சி அலுவலரைத் தாக்கியதோடு சிசிடிவி கேமராவையும் உடைத்தனர்”.

“கடந்த மூன்று நாட்களாக புதிய தலைமுறை தொலைக்காட்சி நிர்வாகத்தினரைத் தொலைபேசியில் தகாத வார்த்தைகளால் அச்சுறுத்துவதும் மிரட்டுவதும் தொடர்ந்துள்ளது. இந்தப் பின்னணியில், நேற்று அதிகாலையில் வெடிகுண்டு வீசி உள்ளனர்”.

“இத்தகைய போக்கு மிகவும் ஆபத்தானது. இந்த வன்முறைச் செயலைப் பின்னணியில் இருந்து இயக்கும் பாசிச இந்துத்துவா சக்திகளுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்” என வைகோ தெரிவித்தார்.