புதுடெல்லி, மார்ச் 13 – முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கொலைவழக்கு தொடர்பாக பாகிஸ்தான் பெண் ஊடகவியலாளர் மெஹர்ரிடம் விசாரணை நடத்த டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
சுனந்தா கொலை வழக்கு தொடர்பாக தேவைப்பட்டால் மெஹர்ரிடம் விசாரிப்போம் என்று டெல்லி மாநகர் காவல் ஆணையர் பி.எஸ்.பஸ்ஸி கூறியுள்ளார். ஆனால் விசாரணைக்கு ஆஜராகும் படி மிக்தராருக்கு சம்மன் எதுவும் அனுபவில்லை என்று அவர் தெரிவித்தார்.
சுனந்தா கொலைவழக்கு தொடர்பாக விசாரித்த டெல்லி போலீசார் தன்னை அணுகினால் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவுள்ளதாக மெஹர் கூறினார். தேவைப்பட்டால் சசிதரூரிடம் மீண்டும் விசாரணை நடத்தவுள்ளதாகும் பி.எஸ்.பஸ்ஸி தெரிவித்தார்.
சசிதரூரிடம் நடத்தப்பட்ட முந்தைய விசாரணையில் மெஹர்ரிக்கும் அவருக்கும் உள்ள உறவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டதாக பஸ்ஸி கூறினார். இதனிடையே மெஹர்ரை சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று பா.ஜக.வை சேர்ந்த சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார்.
சசிதரூர் மற்றும் சுனந்தா இடையே சண்டை உருவாக காரணமாக இருந்தவர் பாகிஸ்தான் பெண் ஊடகவியலாளர் மெஹர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.