மார்ச் 13 – நண்டு நாவிற்கு விருந்து கொடுக்கும் வண்ணம் வித்தியாசமான சுவையுடன் இருப்பது மட்டுமல்லாமல் உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரக்கூடியது. இதற்கு காரணம் நண்டில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் தான்.
அதிலும் நண்டில் கனிமச்சத்துக்கள் தான் அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது. மேலும் இதில் கொழுப்புக்கள் மிகவும் குறைவு. நண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் அதிகம்.
நண்டில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திற்கு தேவையான வைட்டமின் பி12 வளமாக நிறைந்துள்ளது. எனவே நண்டு சாப்பிட்டு வந்தால், இரத்த சோகை ஏற்படுவதைத் தடுக்கலாம்.
நண்டில் உள்ள புரதச்சத்து ஒருவரின் வளர்ச்சிக்கும், எலும்புகளுக்கும் மிகவும் இன்றிமையாதது. எனவே குழந்தைகளுக்கு நண்டு கொடுப்பது மிகவும் நல்லது. மேலும் நண்டு சாப்பிட்டால், முடி, நகம், சருமம் போன்றவையும் ஆரோக்கியமாக இருக்கும்.
நண்டில் கெட்ட கொழுப்புக்கள் குறைவாக உள்ள வைடமின் ‘பி’ அதிகம் உள்ளது. இந்த வைட்டமின் ‘பி’ நல்ல கொழுப்பை அதிகரித்து, கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கும். மக்னீசியம் நரம்பு மற்றும் தசைகளின் இயக்கத்திற்கு மிகவும் முக்கியமானது.
இத்தகைய மக்னீசிய சத்து நண்டில் உள்ளது. இதனால் நரம்புகள் தளர்ந்து, இரத்த அழுத்தத்தின் அளவு சீராக இருக்கும். ஆகையால் நண்டை அதிகம் சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்வோம்.