Home கலை உலகம் ‘தாரை தப்பட்டை’ படப்பிடிப்பில் சசிகுமாருக்கு கை முறிவு!

‘தாரை தப்பட்டை’ படப்பிடிப்பில் சசிகுமாருக்கு கை முறிவு!

610
0
SHARE
Ad

tharai-thappattai-pooja-stills-2-800x544சென்னை, மார்ச் 16 – இயக்குனர் பாலா எழுதி இயக்கி வரும் “தாரை தப்பட்டை” படத்தில் சசிகுமார், வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி தொடர்ந்து தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுபுற இடங்களிலும் படமாக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஒரு வாரமாக சசிகுமார் வில்லனுடன் மோதும் ஆக்ரோஷமான சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு வந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சண்டைக்காட்சியின் போது யாருக்கும் விபத்து ஏதும் நேர்ந்தால் உடனடியாக சிகிச்சை பெற மருத்துவர்கள் குழுவும், 2 அவசரஊர்தியும் தயார் நிலையில் இருந்தனர்.

அப்போது ஆக்ரோஷமான சண்டைக்காட்சி தொடர்ச்சியின் போது சசிகுமார் சற்றும் எதிர்பாரா வண்ணம் விபத்துக்குள்ளானார். இதனால் அவரது இடது கை எலும்பு முறிந்தது. உடனடியாக அங்கிருந்த மருத்துவ குழுவினர் உதவியோடு அவசர ஊர்தியில் ஏற்றி தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

#TamilSchoolmychoice

அங்கு சிகிச்சைக்கு பின் சசிக்குமாரின் இடது கைக்கு மாவு கட்டு போடப்பட்டுபட்டது. சிறிது காலம் ஒய்வெடுக்கும் படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால் இயக்குனர் பாலா படபிடிப்பை தற்காலிகமாக நிறுத்தியுள்ளார்.

தற்போது சசிக்குமார் ஒய்வெடுக்க மதுரை சென்றுள்ளார். படக்குழுவினர் சென்னை திரும்புகின்றனர். சசிகுமார் உடல்நலம் முழுமையாக குணமடைந்ததும் மீண்டும் படபிடிப்பு துவங்கும் என படத்தின் இயக்குநர் பாலா தெரிவித்தார்.