Home இந்தியா இந்தியாவிலேயே திறன்பேசிகளை தயாரிக்க சியாவுமி முடிவு! 

இந்தியாவிலேயே திறன்பேசிகளை தயாரிக்க சியாவுமி முடிவு! 

601
0
SHARE
Ad

indiaaபுதுடெல்லி, மார்ச் 16 – சியாவுமி நிறுவனம் அடுத்த 12-18 மாதங்களில் இந்தியாவிலேயே தனது திறன்பேசிகளை தாயார் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றது.

இதற்கான முதலீடுகள், ஒப்பந்தங்கள் உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் உள்ளதால், இந்தியாவில் முன்னிலை வகிக்கும் சாம்சுங் மற்றும் மைக்ரோமேக்ஸ் நிறுவனங்களுக்கு கடும் போட்டி காத்திருக்கிறது.

சீனாவில் 5 வருடங்களுக்கு முன்னாள் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட சியாவுமி, உலக நிறுவனங்களுக்கு இத்தனை போட்டி அளிக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

#TamilSchoolmychoice

சீன சந்தைகளில் செலுத்திய ஆளுமையால், சாம்சுங் மற்றும் ஆப்பிள்  நிறுவனங்களுக்கு கடும் போட்டி அளித்த சியாவுமி, இந்திய சந்தைகளையும் விட்டு வைக்கவில்லை.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் தனது திறன்பேசிகளின் வர்த்தகத்தை தொடங்கிய சியாவுமி மிகக் குறுகிய காலத்தில் மற்ற நிறுவனங்களுக்கு சவால் அளிக்கும் வர்த்தகத்தை நிகழ்த்திக் காட்டியது.

இந்நிலையில் இந்தியாவிலேயே தாயாரிப்பினை தொடங்க இருப்பது பற்றி சியாவுமியின் துணைத் தலைவர் ஹுகோ பர்ரா கூறுகையில், “இந்திய சந்தைகளில் முழுமையான வர்த்தகத்தை ஏற்படுத்த நாங்கள் விரும்புகிறோம். இதற்கு  தேவையான குறிப்பிடத்தக்க ஆராய்ச்சிகளும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது” என்று கூறியுள்ளார்.

இந்திய சந்தைகளில் 5-வது பெரிய நிறுவனமாக இருக்கும் சியாவுமி, இந்தியாவிலேயே தனது தாயாரிப்பினை தொடங்க பல்வேறு மாநில அமைப்புகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றது.

அனைத்தும் சரியான வகையில் நடந்தால், அடுத்த வருடம் முதல் இந்தியாவிலேயே திறன்பேசிகளை சியாவுமி தாயாரிக்கும் என இந்திய வட்டாரங்கள் கூறுகின்றன.

எனினும், சியாவுமி தனது தொழிற்சாலைகளுக்கு எவ்வளவு முதலீடுகளை செய்ய இருக்கின்றது, அதற்கான வர்த்தக கொள்கைகள் என்ன என்பது போன்ற விளக்கங்களை இன்னும் அளிக்கவில்லை.

எவ்வாறாயினும் பல பில்லியன் டாலர்கள் வர்த்தகம் கொண்ட இந்திய சந்தைகளில் சியாவுமியின் வரவு, இனி மற்ற நிறுவனங்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தும் என்பது மட்டும் நிச்சயம்.